இந்தியாவின் ஏப்ரல் மாத சில்லறை பணவீக்கம் 4.83%

இந்தியாவின் ஏப்ரல் மாத சில்லறை பணவீக்கம் 4.83% ஆக பதிவாகி உள்ளது. இது, முந்தைய மாதத்தில் இது 4.85% ஆக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் விலை குறைவு, உணவு பொருள் விலை ஏற்றம் ஆகியவற்றின் காரணமாக இந்த அளவில் நாட்டின் சில்லறை பணவீக்கம் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. துறை வாரியாக, உணவு பணவீக்கம் 8.7% ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் 8.5% அளவில் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் முதல், […]

இந்தியாவின் ஏப்ரல் மாத சில்லறை பணவீக்கம் 4.83% ஆக பதிவாகி உள்ளது. இது, முந்தைய மாதத்தில் இது 4.85% ஆக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் விலை குறைவு, உணவு பொருள் விலை ஏற்றம் ஆகியவற்றின் காரணமாக இந்த அளவில் நாட்டின் சில்லறை பணவீக்கம் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.

துறை வாரியாக, உணவு பணவீக்கம் 8.7% ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் 8.5% அளவில் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் முதல், 8% அளவுக்கு மேலாக உணவு பணவீக்கம் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில், எரிபொருள் மற்றும் எரிசக்தி துறை சார்ந்த பணவீக்கம் 4.24% ஆக உள்ளது. இந்த சூழலில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசி வருவதால், உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் என மத்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. எனவே, அடுத்தடுத்த மாதங்களில் பணவீக்கம் உயரலாம் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu