இந்தியாவின் மே மாத சில்லறை பணவீக்கம் 4.25% - 2 வருட குறைவான பதிவு

June 13, 2023

இந்தியாவின் மே மாத சில்லறை பணவீக்கம் 4.25% ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த ஏப்ரல் 2021 க்கு பிறகு பதிவாகும் மிகக் குறைந்த பணவீக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதைய நிலையில், சில்லறை பணவீக்கம் 4.23% ஆக பதிவாகி இருந்தது. முன்னதாக, 2023 ஏப்ரலில் 4.7% ஆக சில்லறை பணவீக்கம் பதிவாகி இருந்தது. மேலும், தொடர்ச்சியாக 4 மாதங்களாக, நாட்டின் சில்லறை பணவீக்கம் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், தொடர்ச்சியாக 3 மாதங்களாக மத்திய ரிசர்வ் வங்கியின் 6% […]

இந்தியாவின் மே மாத சில்லறை பணவீக்கம் 4.25% ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த ஏப்ரல் 2021 க்கு பிறகு பதிவாகும் மிகக் குறைந்த பணவீக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதைய நிலையில், சில்லறை பணவீக்கம் 4.23% ஆக பதிவாகி இருந்தது. முன்னதாக, 2023 ஏப்ரலில் 4.7% ஆக சில்லறை பணவீக்கம் பதிவாகி இருந்தது. மேலும், தொடர்ச்சியாக 4 மாதங்களாக, நாட்டின் சில்லறை பணவீக்கம் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், தொடர்ச்சியாக 3 மாதங்களாக மத்திய ரிசர்வ் வங்கியின் 6% விளிம்புக்குள் சில்லறை பணவீக்கம் பதிவாகி வருகிறது.

துறைவாரியாக, உணவுத்துறை சார்ந்த சில்லறை பணவீக்கம் 2.91% ஆக பதிவாகியுள்ளது. இது ஏப்ரலில் 3.84% ஆக இருந்தது. அதே வேளையில், எரிசக்தி துறை சார்ந்த பணவீக்கம் 4.64% ஆக பதிவாகியுள்ளது. இது ஏப்ரலில் 5.52% ஆக இருந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu