கடந்த ஜூலை மாதத்தில், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 15 மாத உச்சத்தை பதிவு செய்துள்ளது. குறிப்பாக, உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் பன்மடங்கு உயர்வை பதிவு செய்துள்ளன.
கடந்த ஜூலை மாதத்தில், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 7.44% ஆக அரசாங்க பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் 7.79% ஆக இருந்த சில்லறை பணவீக்கமே, இதற்கு முன்னர் பதிவான அதிகமான பணவீக்கமாகும். கடந்த மாதத்தில், காய்கறிகள் மீதான பணவீக்கம் 37.43% உயர்ந்துள்ளது. அதே வேளையில், பருப்பு மற்றும் இதர பொருட்கள் பணவீக்கம் 13% உயர்வை பதிவு செய்துள்ளது. மொத்தத்தில், உணவுத்துறை பணவீக்கம் 11.51% ஆக பதிவாகியுள்ளது.