இந்தியாவின் ஆகஸ்ட் மாத சில்லறை பணவீக்கம் 6.83% ஆக சரிவு

September 13, 2023

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6.83% ஆக பதிவாகியுள்ளது. முன்னதாக, கடந்த ஜூலை மாதத்தில், 15 மாத உச்சமாக 7.44% அளவில் சில்லறை பணவீக்கம் பதிவாகி இருந்தது. உணவுப் பொருட்களின் விலைகள் வெகுவாக குறைந்ததை அடுத்து, ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், உணவுத்துறையில் 9.94% பணவீக்கம் பதிவாகி உள்ளது. இது, ஜூலை மாதத்தில் 11.51% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. சில்லறை வணிகத்தை பொறுத்தவரை, 50% க்கும் அதிகமான […]

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6.83% ஆக பதிவாகியுள்ளது. முன்னதாக, கடந்த ஜூலை மாதத்தில், 15 மாத உச்சமாக 7.44% அளவில் சில்லறை பணவீக்கம் பதிவாகி இருந்தது. உணவுப் பொருட்களின் விலைகள் வெகுவாக குறைந்ததை அடுத்து, ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், உணவுத்துறையில் 9.94% பணவீக்கம் பதிவாகி உள்ளது. இது, ஜூலை மாதத்தில் 11.51% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. சில்லறை வணிகத்தை பொறுத்தவரை, 50% க்கும் அதிகமான பங்களிப்பை கொண்டுள்ள உணவுத்துறையில் பணவீக்கம் குறைந்ததால், ஒட்டுமொத்த சில்லறை பணவீக்க விகிதம் குறைந்துள்ளது. ஆனாலும், மத்திய ரிசர்வ் வங்கியின் 2% முதல் 6% விளிம்புக்கு அதிகமாக சில்லறை பணவீக்கம் பதிவாகியுள்ளது கவனிக்கத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu