கடந்த செப்டம்பர் மாதத்தில், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 5.02% அளவில் பதிவாகியுள்ளது. இது கடந்த 3 மாதங்களில் பதிவான மிகக் குறைந்த சில்லறை பணவீக்கம் ஆகும். அத்துடன், மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள 6% விளிம்புக்குள் மீண்டும் சில்லறை பணவீக்கம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.துறை வாரியாக, உணவு மற்றும் பானங்கள் துறையில் 6.3% சில்லறை பணவீக்கம் பதிவாகியுள்ளது. தானியங்கள் விலைகள் 10.95% உயர்ந்துள்ளன. முட்டை விலை 6.42% மற்றும் பருப்பு வகைகள் விலை 16.4% உயர்வை பதிவு செய்துள்ளன. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், சில்லறை பணவீக்கம் 15 மாத உச்சமாக இருந்தது. அதிலிருந்து, செப்டம்பர் மாதத்தில் வெகுவாக குறைந்துள்ளது, இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக்கு மிகவும் துணை புரியும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.