கடந்த ஜூன் மாதத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தது. இதன் எதிரொலியாக இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 5.08% ஆக உயர்ந்துள்ளது. தேசிய புள்ளியியல் ஆய்வகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் உணவுத்துறை சார்ந்த பணவீக்கம் 8.69% இல் இருந்து 9.36% ஆக உயர்ந்துள்ளது. மீன், தானியங்கள், இறைச்சி, முட்டை, பால், எண்ணெய், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், சர்க்கரை, மசாலா போன்ற அனைத்து விதமான உணவு வகைகளின் விலையும் ஜூன் மாதத்தில் உயர்ந்துள்ளது. இதுவே, சில்லறை பணவீக்கம் உயர்ந்ததற்கான முக்கிய காரணமாக சொல்லப்பட்டுள்ளது. பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.