இந்தியாவின் செப்டம்பர் மாத சில்லறை பணவீக்கம் 5.49% ஆக உயர்வு

October 15, 2024

இந்தியாவின் செப்டம்பர் மாத சில்லறை பணவீக்கம் 5.49% ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இது 3.65% ஆக இருந்த நிலையில் இந்த உயர்வு கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கு முக்கிய காரணம் உணவுப் பொருட்களின் விலை உயர்வு தான். நுகர்வோர் உணவு விலைக் குறியீடு (CFPI) 9.24% ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் 9.08% ஆகவும், நகர்ப்புறங்களில் 9.56% ஆகவும் உணவுப் பணவீக்கம் பதிவாகியுள்ளது. இந்த அதிகரிப்புக்கு மத்தியில், பருப்பு வகைகள், மசாலாப் பொருட்கள் மற்றும் […]

இந்தியாவின் செப்டம்பர் மாத சில்லறை பணவீக்கம் 5.49% ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இது 3.65% ஆக இருந்த நிலையில் இந்த உயர்வு கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.

பணவீக்க உயர்வுக்கு முக்கிய காரணம் உணவுப் பொருட்களின் விலை உயர்வு தான். நுகர்வோர் உணவு விலைக் குறியீடு (CFPI) 9.24% ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் 9.08% ஆகவும், நகர்ப்புறங்களில் 9.56% ஆகவும் உணவுப் பணவீக்கம் பதிவாகியுள்ளது. இந்த அதிகரிப்புக்கு மத்தியில், பருப்பு வகைகள், மசாலாப் பொருட்கள் மற்றும் சர்க்கரை போன்ற சில பொருட்களின் விலை குறைந்துள்ளது. மின்சாரக் கட்டணம் 5.45% உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கி, வரும் ஆண்டில் பணவீக்கம் 4.5% ஆக குறையும் என்று எதிர்பார்க்கிறது. மேலும், பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu