பெண்களால் பெறப்பட்ட கடன்கள் - 2022ல் 25% உயர்வு

March 7, 2023

இந்தியாவில் பெண்களால் பெறப்படும் கடன்களின் எண்ணிக்கை மற்றும் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், 2022 ஆம் ஆண்டில், பெண்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் 25% உயர்ந்து, 26 லட்சம் கோடி மதிப்பில் பதிவாகியுள்ளது. பெண்களுக்கு வழங்கப்பட்ட கடன்களில், வீட்டு கடன் 20% அதிகரித்து 3052041 கோடி மதிப்பில் உள்ளது. தொழிலுக்காக வழங்கப்படும் கடன் 25% உயர்ந்து, 1373899 கோடி அளவிலும், தனிநபர் கடன் 35% உயர்ந்து 1005864 கோடி மதிப்பிலும் பதிவாகியுள்ளது. மேலும், வேளாண் […]

இந்தியாவில் பெண்களால் பெறப்படும் கடன்களின் எண்ணிக்கை மற்றும் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், 2022 ஆம் ஆண்டில், பெண்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் 25% உயர்ந்து, 26 லட்சம் கோடி மதிப்பில் பதிவாகியுள்ளது.

பெண்களுக்கு வழங்கப்பட்ட கடன்களில், வீட்டு கடன் 20% அதிகரித்து 3052041 கோடி மதிப்பில் உள்ளது. தொழிலுக்காக வழங்கப்படும் கடன் 25% உயர்ந்து, 1373899 கோடி அளவிலும், தனிநபர் கடன் 35% உயர்ந்து 1005864 கோடி மதிப்பிலும் பதிவாகியுள்ளது. மேலும், வேளாண் துறை மற்றும் டிராக்டர் ஆகியவற்றிற்காக பெறப்பட்ட கடன் 8% உயர்ந்து 914412 கோடியாக பதிவாகியுள்ளது. வாகனங்களுக்காக பெறப்பட்ட கடன் 26% உயர்ந்து 572366 கோடி ஆகவும், கல்வி கடன் 25% உயர்ந்து 129598 கோடி ஆகவும் பதிவாகியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பெண்கள் அதிக கடன்கள் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu