வங்கதேச உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சம்சுதீன் சௌத்ரி மாணிக், வடகிழக்கு எல்லை பகுதியான சில்ஹெட் வழியாக இந்தியாவுக்கு தாதப்பியோட முற்பட்டபோது, வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அவர் இரவு முழுக்க அங்குள்ள நிலையத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்ததாகத் தகவல் வந்துள்ளது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் அரசு கவிழ்ந்த நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது, முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைமைப் பதவியேற்றுள்ளார். ஆகஸ்ட் 5-ஆம் தேதி அரசுக்கு எதிரான வன்முறையால் இந்தியாவுக்கு பலர் தப்பியோடியினர். சம்சுதீன் சௌத்ரி மாணிக்குடன், முன்னாள் அமைச்சர்கள், தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் பல தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.