மாமல்லபுரத்தில் மிச்சாங் புயலின் காரணமாக கடந்த மூன்று நாட்களாக பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தில் மிச்சாங் புயல் தாக்கத்தால் மாமல்லபுரத்தில் கனமழை பெய்தது . இதனால் மாமல்லபுரம் சுற்றுலாப் பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது அனைத்து வழித்தடங்களில் இருந்தும் பஸ்கள் இயங்கி இயல்புநிலை திரும்பி உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வரவு தொடங்கியுள்ளது. அதனால் கடற்கரை கோவில் சாலை, ஐந்துரதம், அர்ச்சுனன் தவசு, வெண்ணெய் உருண்டைகள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையோர கடைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இத்னால் அங்கு இயல்புநிலை திரும்பியுள்ளது.