மலாவி மற்றும் ஜிம்பாப்வே நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி

June 21, 2024

கடந்த 2023 ஜூலை மாதத்தில் பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. உள்நாட்டில் அரிசி விலையை கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு, குறிப்பிட்ட சில நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி அனுமதிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த நாட்டின் அடிப்படை உணவு தேவையை கருத்தில் கொண்டு அரிசி ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது 2 ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவை சேர்ந்த […]

கடந்த 2023 ஜூலை மாதத்தில் பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. உள்நாட்டில் அரிசி விலையை கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு, குறிப்பிட்ட சில நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி அனுமதிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த நாட்டின் அடிப்படை உணவு தேவையை கருத்தில் கொண்டு அரிசி ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது 2 ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவை சேர்ந்த மலாவி மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு தலா 1000 டன் அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதியை மேற்கொள்ள உள்ளது. முன்னதாக, நேபாளம், மலேசியா, பிலிப்பைன்ஸ், செஷல்ஸ், கினியா, கேமரூன் ஆகிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu