ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 5208 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. காலாண்டு அளவில் 3% உயர்வாகும். மேலும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் முந்தைய காலாண்டை விட 2.5% உயர்ந்து 25368 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 2.3% உயர்ந்துள்ளது. மேலும், செயல்பாட்டு வருவாய் 10.3% உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் மொத்த செலவினங்கள் 2.5% உயர்ந்து, 18518 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10% உயர்வாகும்.