மீண்டும் மணிப்பூரில் கலவரம்

December 21, 2023

மணிப்பூரில் நேற்று முன்தினம் மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையான சமூகத்தினரான மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதற்கு குகி மற்றும் நாகா மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததை தொடர்ந்து மே மாத 3 ஆம் தேதி பழங்குடியின மாணவர் அமைப்பு பேரணி நடத்தினர். இது கலவரமாக வெடித்தது. இச்சம்பவத்தில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் சில அசம்பாவிதங்கள் அவ்வப்போது நடந்து […]

மணிப்பூரில் நேற்று முன்தினம் மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது.

மணிப்பூரில் பெரும்பான்மையான சமூகத்தினரான மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதற்கு குகி மற்றும் நாகா மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததை தொடர்ந்து மே மாத 3 ஆம் தேதி பழங்குடியின மாணவர் அமைப்பு பேரணி நடத்தினர். இது கலவரமாக வெடித்தது. இச்சம்பவத்தில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் சில அசம்பாவிதங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றது. இந்த நிலையில் மீண்டும் மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இது சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள திங்கங் பாய் கிராமத்தில் நேற்று முன்தினம் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சூரசந்த்பூர் மாவட்ட ஆட்சியர் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த ஊரடங்கு உத்தரவு வரும் 2024 பிப்ரவரி மாதம் 18ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இது தவிர இங்கு ஐந்து நாட்களுக்கு இணையதளங்கள் அனைத்தும் முடக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu