மணிப்பூர் மாநிலத்தில் திடீரென காரில் வந்திருந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் பலியாகினார்.
மணிப்பூர் மாநிலத்தில் தௌபால் மாவட்டத்தின் லிலால் சிங்காவ் பகுதிக்கு திடீரென வந்த மர்ம நபர்கள் பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில் பொதுமக்கள் மூன்று பேர் பலியாகினார். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் ஆகிய மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உள்ளூர்வாசிகள் 3, 4 சக்கர வாகனங்களுக்கு தீயிட்டு கொளுத்தினர். இந்த சம்பவத்திற்கு மாநில முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்கும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.














