கால்பந்து போட்டியில், பெல்ஜியம் மொரோக்கோவிடம் தோற்றதால், புருசெல்ஸ்-ல் வன்முறை

November 28, 2022

உலகக் கோப்பை கால்பந்து தொடரில், ஞாயிற்றுக்கிழமை, பெல்ஜியம் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதின. இதில் 2-0 கோல் கணக்கில், மொரோக்கோ அணி வென்றது. இதனால் பெல்ஜியம் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பெல்ஜியம் மற்றும் மொரோக்கோ மக்கள் வசிக்கும் புருசெல்ஸ் நகரங்களில் வன்முறை வெடித்தது. கால்பந்து ரசிகர்கள், கார்களை எரித்தும், மின்சார ஸ்கூட்டர்களுக்கு தீ வைத்தும் தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். வன்முறை நடந்த பகுதிகளுக்கு வந்த காவல்துறையினர், கண்ணீர் புகை குண்டு வீசி, கூட்டத்தை கலைத்தனர். காவல்துறையினர் மீதும் […]

உலகக் கோப்பை கால்பந்து தொடரில், ஞாயிற்றுக்கிழமை, பெல்ஜியம் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதின. இதில் 2-0 கோல் கணக்கில், மொரோக்கோ அணி வென்றது. இதனால் பெல்ஜியம் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பெல்ஜியம் மற்றும் மொரோக்கோ மக்கள் வசிக்கும் புருசெல்ஸ் நகரங்களில் வன்முறை வெடித்தது.

கால்பந்து ரசிகர்கள், கார்களை எரித்தும், மின்சார ஸ்கூட்டர்களுக்கு தீ வைத்தும் தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். வன்முறை நடந்த பகுதிகளுக்கு வந்த காவல்துறையினர், கண்ணீர் புகை குண்டு வீசி, கூட்டத்தை கலைத்தனர். காவல்துறையினர் மீதும் அவர்கள் வன்முறையில் ஈடுபடத் துவங்கினர். இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் கால்பந்து ரசிகர்கள் அல்ல; அவர்கள் வன்முறை செய்வதற்காகவே வந்தவர்கள் என்று சிலர் கூறுகின்றனர். சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் வன்முறையில் இறங்கியதாக கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu