மங்கள்யான் திட்டம் நிறைவு பெற்றது - இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு

October 12, 2022

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக, இந்தியா, ‘மங்கள்யான்’ என்ற விண்கலத்தை செலுத்தியது. மற்றொரு கோளை ஆராய்வதற்காக இந்தியா சார்பில் செலுத்தப்பட்ட முதல் விண்கலம் இதுவாகும். மேலும், இந்த முதல் முயற்சியிலேயே இந்தியா வெற்றி பெற்று, உலகின் கவனத்தை ஈர்த்ததுடன்,பாராட்டுக்களை குவித்தது. இந்தியாவின் இந்த பெருமை மிகு விண்கலம், தற்போது, தனது ஆயுள் காலத்தை நிறைவு செய்துள்ளதாக இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். மேலும், மங்கள்யானின் அனைத்து செயல்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 5, 2013 ஆம் […]

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக, இந்தியா, ‘மங்கள்யான்’ என்ற விண்கலத்தை செலுத்தியது. மற்றொரு கோளை ஆராய்வதற்காக இந்தியா சார்பில் செலுத்தப்பட்ட முதல் விண்கலம் இதுவாகும். மேலும், இந்த முதல் முயற்சியிலேயே இந்தியா வெற்றி பெற்று, உலகின் கவனத்தை ஈர்த்ததுடன்,பாராட்டுக்களை குவித்தது. இந்தியாவின் இந்த பெருமை மிகு விண்கலம், தற்போது, தனது ஆயுள் காலத்தை நிறைவு செய்துள்ளதாக இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். மேலும், மங்கள்யானின் அனைத்து செயல்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 5, 2013 ஆம் ஆண்டு, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் பின்னர், செப்டம்பர் 24, 2014 ஆம் ஆண்டில், செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யான் நிலைநிறுத்தப்பட்டது. மங்கள்யான் திட்டம், 74 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் செயல்படுத்தப்பட்டது. இந்த விண்கலம் ஆறு மாதம் வரையில் மட்டுமே செயல்படும் விதத்தில் உருவாக்கப்பட்டது. ஆனால், 8 வருடங்கள் வரையில் இந்த விண்கலம் ஆய்வுப் பணியை மேற்கொண்டு, இந்திய விஞ்ஞானிகளுக்கு பெருமை சேர்த்துள்ளது. இதுகுறித்து, பிரதமர் மோடி ஒரு முறை, “ஹாலிவுட் திரைப்படமான கிராவிட்டியின் திட்ட மதிப்பை விட மங்கள்யான் திட்டத்தின் மதிப்பு குறைவு” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 2ம் தேதி, ஏப்ரல் மாதத்தில் 7 மணி நேரம் வரை நீடித்த கிரகணத்தின் போது, மங்கள்யானுடன் பூமிக்கு இருந்த தொடர்பு முற்றிலும் நீங்கியதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன், அந்த விண்கலத்தை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாது என்றும், மங்கள்யான் திட்டம் இத்துடன் நிறைவு பெற்றுவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “மங்கள்யான் குறித்த கண்காணிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் செயல்படவில்லை. விண்கலம் முழுமையாக எரிபொருளை இழந்துள்ளது. அதனால், இந்த திட்டம் நிறைவு பெற்றுள்ளது. மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் தொடர்ந்து இருந்து வந்தாலும், அதனை இங்கிருந்து கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாது. எனவே, அதன் மின்னணு பாகங்கள் நல்ல நிலையில் இருந்தாலும் கூட, விண்கலம் செயல்பாட்டில் இல்லாமல் போகிறது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் வேறு பல செயற்கைக்கோள்களும் உள்ளதால், மங்கள்யான் அவற்றுடன் மோதுவதற்கான சாத்தியக் கூறுகள் ஏற்பட்டுள்ளன. எனவே, மங்கள்யானை கட்டுப்படுத்த இயலாத சூழ்நிலை குறித்து சர்வதேச நாடுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். மங்கள்யான், செவ்வாய் கிரகத்தின் வியத்தகு புகைப்படங்களை அனுப்பியுள்ளது. அதை வைத்து, நாசா உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. விண்கலம் செயலிழந்தாலும், அதன் மூலம் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu