இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கி, ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர இறுதியில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 367.47 புள்ளிகள் உயர்ந்து 66527.67 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 107.75 புள்ளிகள் உயர்ந்து 19753.8 புள்ளிகளாக உள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, என்டிபிசி, ஓஎன்ஜிசி, பவர் கிரிட், அதானி போர்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், அதானி எண்டர்பிரைசஸ் போன்ற அனேக நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், பிரிட்டானியா, ஹெச்டிஎஃப்சி லைப், டேவிட் லேப்ஸ், அப்போலோ ஹாஸ்பிடல் உள்ள சில நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.