இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் எகிப்து செல்கிறார்

October 20, 2023

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நேற்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை சந்தித்து பேசினார். அவர் இரண்டு நாள் பயணமாக மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களை சந்தித்து போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர் இஸ்ரேல் தலைவர்களுடனான சந்திப்பின்போது போரை கட்டுப்படுத்த வலியுறுத்தினார். அதோடு மக்கள் பலியாவதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இஸ்ரேல் பயணத்திற்கு பிறகு ரிஷி சுனக் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசும்போது போர் […]

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நேற்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை சந்தித்து பேசினார். அவர் இரண்டு நாள் பயணமாக மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களை சந்தித்து போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர் இஸ்ரேல் தலைவர்களுடனான சந்திப்பின்போது போரை கட்டுப்படுத்த வலியுறுத்தினார். அதோடு மக்கள் பலியாவதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இஸ்ரேல் பயணத்திற்கு பிறகு ரிஷி சுனக் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசும்போது போர் விரிவடைவதை தடுக்கவும் காசாவுக்கு தேவையான வாழ்வாதார உதவிகளை மேற்கொள்ளவும் நிலையான ஆதரவை நீண்ட கால நோக்கில் அளிக்கவும் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ரிஷி சுனக் எகிப்து செல்ல உள்ளார். அங்கு அவர் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். இன்று பிற்பகல் அவர் பாலஸ்தீன பிரதமர் முகமது அப்பாசுடன் சந்திப்பு நிகழ்த்தப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu