பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் பயணம்

October 19, 2023

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தீவிர போர் நடந்து வரும் இக்கட்டான சூழலில், அமெரிக்க அதிபரை தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் சென்றுள்ளது சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேற்று இஸ்ரேலுக்கு சென்று தனது ஆதரவை தெரிவித்தார். இந்த நிலையில், இன்று, பிரிட்டன் […]

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தீவிர போர் நடந்து வரும் இக்கட்டான சூழலில், அமெரிக்க அதிபரை தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் சென்றுள்ளது சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேற்று இஸ்ரேலுக்கு சென்று தனது ஆதரவை தெரிவித்தார். இந்த நிலையில், இன்று, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சென்றுள்ளார். இஸ்ரேலுக்கான ஆதரவை அவர் நேரில் தெரிவித்துள்ளார். மேலும், ஹமாஸ் படையினரால் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதென்யாகுவை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu