இந்தியாவின் தங்கத்தின் தேவை 210.2 டன்னாக உயர்ந்துள்ளது.
நடப்பு ஆண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்கள் அடங்கிய மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் தங்கத்தேவை 210.2 டன் ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த 3 ஆவது காலாண்டில் தங்கம் விலை சரிந்ததும், பண்டிகை காலங்களும் தங்கத்தின் தேவை அதிகரிக்க காரணம் என உலக தங்க கவுன்சிலின் இந்திய தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.