தமிழ் சினிமா பிரபலம் ஆர்.கே.சுரேஷ், பாஜகவில் இருந்து விலகி இந்திய ஜனநாயகக் கட்சியில் இணைந்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த ஐஜேகேவில் ஆர்.கே.சுரேஷ் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பாஜகவில் முக்கியப் பொறுப்பில் இருந்த இவர், ஆருத்ரா கோல்டு வழக்கில் சிக்கியதால் கட்சியில் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது, ஐஜேகேவில் அகில இந்திய அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.