தென்கொரியாவில் ரோபோ தற்கொலை

பொதுவாக, அதிகமான பணிச்சுமை, மன அழுத்தம் போன்ற காரணத்தால் மனிதர்கள் தான் தற்கொலை செய்து கொள்வார்கள். தென்கொரியாவில் ரோபோ ஒன்று அதிக பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. தென்கொரியாவில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் ஊழியர்களுக்கு உதவி செய்வதற்காக ரோபோ ஒன்று பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2023 அக்டோபரில் இந்த ரோபோ பணியில் சேர்க்கப்பட்டுள்ளது. காலை 9 முதல் மாலை 4 வரை இந்த ரோபோவுக்கு பணிகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்களிடமிருந்து ஆவணங்களை சேகரித்து அதிகாரிகளிடம் […]

பொதுவாக, அதிகமான பணிச்சுமை, மன அழுத்தம் போன்ற காரணத்தால் மனிதர்கள் தான் தற்கொலை செய்து கொள்வார்கள். தென்கொரியாவில் ரோபோ ஒன்று அதிக பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

தென்கொரியாவில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் ஊழியர்களுக்கு உதவி செய்வதற்காக ரோபோ ஒன்று பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2023 அக்டோபரில் இந்த ரோபோ பணியில் சேர்க்கப்பட்டுள்ளது. காலை 9 முதல் மாலை 4 வரை இந்த ரோபோவுக்கு பணிகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்களிடமிருந்து ஆவணங்களை சேகரித்து அதிகாரிகளிடம் வழங்கும் பணியை முதன்மையாக மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், நகராட்சி கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து முதல் தளத்துக்கு இறங்கி வரும் படிகளில் ரோபோ விழுந்து நொறுங்கி உள்ளது. ரோபோவின் உடைந்த பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ரோபோ விழுந்து நொறுங்குவதற்கு முன்பாக, இரண்டாம் தளத்தில் உள்ள குறிப்பிட்ட இடத்தை சுற்றி சுற்றி வந்ததாகவும், குழப்பத்துடன் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu