கேரளாவில் கோயில் பணிகளை மேற்கொள்ள ரோபோ யானை அறிமுகம்

February 28, 2023

கேரளாவில் கோயில் பணிகளை மேற்கொள்ள முதல்முறையாக ரோபோ யானை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் பூஜைகளின் போது மதம் பிடித்து பாகன் மற்றும் பக்தர்களை தாக்குவது உண்டு. அத்தகைய சூழ்நிலையை தவிர்க்கும் விதமாக கேரள திருச்சூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்தில் ரோபோ யானை சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது முழுக்க முழுக்க மின்னணு மூலம் இயங்கும் ஒரு ரோபோ என்று கூறப்படுகிறது. இரிஞ்சாடன்பிள்ளி ராமன் என்ற அழைக்கப்படும் இந்த ரோபோ யானையின் எடை 800 கிலோ […]

கேரளாவில் கோயில் பணிகளை மேற்கொள்ள முதல்முறையாக ரோபோ யானை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் பூஜைகளின் போது மதம் பிடித்து பாகன் மற்றும் பக்தர்களை தாக்குவது உண்டு. அத்தகைய சூழ்நிலையை தவிர்க்கும் விதமாக கேரள திருச்சூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்தில் ரோபோ யானை சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது முழுக்க முழுக்க மின்னணு மூலம் இயங்கும் ஒரு ரோபோ என்று கூறப்படுகிறது. இரிஞ்சாடன்பிள்ளி ராமன் என்ற அழைக்கப்படும் இந்த ரோபோ யானையின் எடை 800 கிலோ என தெரிவித்தனர். 10 அடி உயரம் கொண்ட இந்த யானையின் மேல் 4 பேர் வரை அமரலாம் என்கின்றனர்.

யானையின் தலை, கண்கள் மற்றும் காதுகளை இயக்குவதற்கு ஐந்து மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிகம் கூடும் பூஜைகளின் போது யானைகளுக்கு மதம் பிடிக்கும் வாய்ப்பு அதிகமிருப்பதால், அவ்வகையான பூஜைகளுக்கு இந்த ரோபோ யானையை பயன்படுத்தலாம் என இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu