ஐரோப்பாவின் முதல் வர்த்தக ராக்கெட், பரிசோதனை தளத்தில் வெடித்து சிதறியது

ஷெட்லேண்ட் தீவுகளில் உள்ள சாக்சாவோர்ட் ஸ்பேஸ்போர்ட்டில் ஐரோப்பாவின் முதல் வர்த்தக ராக்கெட் பரிசோதனை நடத்தப்பட்டது. ஜெர்மன் நிறுவனமான ராகெட் பேக்டரி ஆக்ச்பர்க் (RFA) தயாரித்த RFA ONE ராக்கெட்டின் முதல் நிலை சோதனையில் வெடிப்பு ஏற்பட்டது. ஆகஸ்ட் 19 அன்று நடத்தப்பட்ட இந்த சோதனையின் போது, ராக்கெட்டின் அடிப்பகுதியில் வெடிப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக, ராக்கெட்டின் முதல் நிலை அழிந்துவிட்டது. நல்வாய்ப்பாக, யாருக்கும் இதனால் பாதிப்பு ஏற்படவில்லை. RFA, சாக்சாவோர்ட் ஸ்பேஸ்போர்ட் மற்றும் UK சிவில் ஏவியேஷன் […]

ஷெட்லேண்ட் தீவுகளில் உள்ள சாக்சாவோர்ட் ஸ்பேஸ்போர்ட்டில் ஐரோப்பாவின் முதல் வர்த்தக ராக்கெட் பரிசோதனை நடத்தப்பட்டது. ஜெர்மன் நிறுவனமான ராகெட் பேக்டரி ஆக்ச்பர்க் (RFA) தயாரித்த RFA ONE ராக்கெட்டின் முதல் நிலை சோதனையில் வெடிப்பு ஏற்பட்டது.

ஆகஸ்ட் 19 அன்று நடத்தப்பட்ட இந்த சோதனையின் போது, ராக்கெட்டின் அடிப்பகுதியில் வெடிப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக, ராக்கெட்டின் முதல் நிலை அழிந்துவிட்டது. நல்வாய்ப்பாக, யாருக்கும் இதனால் பாதிப்பு ஏற்படவில்லை. RFA, சாக்சாவோர்ட் ஸ்பேஸ்போர்ட் மற்றும் UK சிவில் ஏவியேஷன் அத்தாரிட்டி ஆகியவை இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu