சிரியாவில் உள்ள ராணுவ தளம் மீது ஈராக் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈராக் பிரதமர் முகமது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சமீபத்தில் சந்தித்தார். அதற்கு அடுத்த நாள் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. ஈராக்கின் ஜும்மா நகரில் இருந்து சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை நோக்கி ராக்கெட்டுகள் வீசப்பட்டுள்ளது. ஈராக் பிரதமர் முகமது சியா சுல்தானி சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு அவர் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை சந்தித்து உரையாடினார். அதனையொட்டி இந்த சம்பவம் நடந்துள்ளது. சிரியா எல்லையில் இருந்து தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்று வருவதாக ஈராக் பாதுகாப்பு படை கூறியுள்ளது.