இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா, இரட்டையர் பிரிவில் நீண்ட காலமாக முன்னணி வீரராக இருந்தவர்.
2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஏடிபி டாப் 50 தரவரிசையில் இடம் பிடித்திருந்த போபண்ணா, தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளார். பிரெஞ்சு ஓபனில் 3ஆம் சுற்றில் அவர் ஜோடி தோல்வியடைந்ததை அடுத்து, அவர் தரவரிசையில் 20 இடங்கள் சரிந்து 53வது இடத்திற்கு சென்றுள்ளார்.
இதனால், அவர் தொடர்ந்து பராமரித்த வந்த உலக தரவரிசை முன்னணியில் இடம் பெற முடியாமல் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது