ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் பணி நீக்கம்

May 29, 2023

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் பணி நீக்கம் செய்யப்படலாம் என தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, நிறுவனத்தின் உற்பத்தி இல்லா துறைகளில் பணி நீக்கம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 30,000 பணியிடங்களில், 10% பணியிடங்கள் நீக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக, நிறுவனத்தின் தலைமையகமான டெர்பியில் பணிபுரிபவர்கள் இதனால் அதிகமாக பாதிப்படையலாம் என்று கூறப்படுகிறது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டூபான் எர்கின்பிலிக், நிறுவனத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடங்கி உள்ளதாகவும், அதனால் நிர்வாகத்தில் […]

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் பணி நீக்கம் செய்யப்படலாம் என தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, நிறுவனத்தின் உற்பத்தி இல்லா துறைகளில் பணி நீக்கம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 30,000 பணியிடங்களில், 10% பணியிடங்கள் நீக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக, நிறுவனத்தின் தலைமையகமான டெர்பியில் பணிபுரிபவர்கள் இதனால் அதிகமாக பாதிப்படையலாம் என்று கூறப்படுகிறது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டூபான் எர்கின்பிலிக், நிறுவனத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடங்கி உள்ளதாகவும், அதனால் நிர்வாகத்தில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் எனவும் கூறப்படுகிறது. அண்மையில், மெக்கின்சி மூலம் ஆட்சேர்ப்பு செய்த ரோல்ஸ் ராய்ஸ், தற்போது பணி நீக்கத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu