உயர்தர கார்களை தயாரித்து வரும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ், பணி நீக்க நடவடிக்கையில் களமிறங்க உள்ளது. கிட்டத்தட்ட 2500 பணியாளர்களை நீக்க உள்ளதாக இன்று அறிவித்துள்ளது. சர்வதேச அளவில், நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளிலும் இந்த பணி நீக்கங்கள் பரவலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரிட்டனில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
கடந்த மே மாதத்தில், செலவுகளை குறைக்கும் முக்கிய நடவடிக்கைகளில் களமிறங்க உள்ளதாக ரோல்ஸ் ராய்ஸ் அறிவித்திருந்தது. அதன்படி, உற்பத்தி அல்லாத இதர பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் நீக்கப்படலாம் என கருதப்படுகிறது.