டெலாய்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ரோமல் ஷெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் ஏப்ரல் 1, 2023 முதல், 4 ஆண்டுகளுக்கு இவர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெலாய்ட் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த நவம்பர் 22 அன்று, டெலாய்ட் நிறுவனத்தின் நியமனக்குழு, ரோமல் ஷெட்டி தலைமை பொறுப்பு ஏற்பது குறித்து பங்குதாரர்களுக்கு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு ரோமல் ஷெட்டி மற்றும் ரோஹித் மகாஜன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரோமல் ஷெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு, டெலாய்ட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். நிறுவனத்தின் ஆலோசனை பிரிவின் தலைவராக இவர் பொறுப்பு வகித்து வந்தார்.














