திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலில் ரோப் கார் வசதி ஏற்படுத்த ஆய்வு மேற்கொள்ள பட உள்ளது.
திருச்சியில் பல்வேறு வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கிய உச்சி பிள்ளையார் கோவில் உள்ளது. இதில் உள்ள பாறைகள் மலைக்கோட்டை என்ற பெயரும் உள்ளது. இங்கு செல்வதற்கு 400 க்கும் மேற்பட்ட படிகளை ஏறி செல்ல வேண்டும். இது மிகவும் பழமையான கோவில் என்பதால் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். மேலும் இதன் படிக்கட்டுகள் செங்குத்தாக இருப்பதால் படியேறி செல்ல கடினமாக உள்ளது.இதனால் ரோப் கார் திட்டத்தை உருவாக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதற்காக முன்னர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. தற்போது மத்திய அரசு ரோப் கார் அமைக்க போதுமான சாத்தியகூறு அறிக்கை தயாரிப்பு பணியை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதில் குறிப்பாக உச்சிப் பிள்ளையார் கோவிலில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்து ரோப் கார் வசதி செய்ய ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் இறுதி பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும். இதனால் விரைவில் நவீன தொழில்நுட்ப வசதியுடன் உலக தரத்தில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என பக்தர்கள் மற்றும் மக்கள் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.














