இந்தியாவின் பிரபலமான இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, கடந்த பிப்ரவரி மாதம் 21% விற்பனை உயர்வை பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் மொத்த இருசக்கர வாகன விற்பனை எண்ணிக்கை, கடந்த பிப்ரவரி மாதத்தில், 71544 ஆக பதிவாகியுள்ளது. இதுவே முந்தைய ஆண்டின் பிப்ரவரி மாதத்தில், 59160 என்ற எண்ணிக்கையில் பதிவாகி இருந்தது.
ராயல் என்ஃபீல்டு வாகனங்களின் உள்நாட்டு விற்பனை, கடந்த 2021 டிசம்பர் மாதத்தில், 52135 ஆக பதிவாகி இருந்தது. இது கடந்த பிப்ரவரி மாதத்தில் 24% உயர்ந்து, 64436 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நிறுவனத்தின் ஏற்றுமதி வாகனங்கள் எண்ணிக்கை, வருடாந்திர அடிப்படையில் 1% உயர்ந்து, 7108 ஆக பதிவாகியுள்ளது.