ராயல் என்ஃபீல்டு மின்சார வாகனம் - 1000 கோடி முதலீடு

ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தனித்துவமான மின்சார மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் உள்ள உற்பத்தி ஆலையில் அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பி கோவிந்தராஜன் இது தொடர்பாக பேசும் போது, "ஈச்சர் மோட்டார்ஸ் பிரிவான ராயல் என்ஃபீல்டு நிறுவனம், 2024 ஆம் நிதி ஆண்டில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் மின்சார வாகன உற்பத்தி மற்றும் தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. மேலும், ஏற்கனவே உள்ள மோட்டார் சைக்கிளில் மேம்படுத்தல்களை […]

ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தனித்துவமான மின்சார மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் உள்ள உற்பத்தி ஆலையில் அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பி கோவிந்தராஜன் இது தொடர்பாக பேசும் போது, "ஈச்சர் மோட்டார்ஸ் பிரிவான ராயல் என்ஃபீல்டு நிறுவனம், 2024 ஆம் நிதி ஆண்டில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் மின்சார வாகன உற்பத்தி மற்றும் தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. மேலும், ஏற்கனவே உள்ள மோட்டார் சைக்கிளில் மேம்படுத்தல்களை கொண்டு வரவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "மின்சார வாகனத் துறையில் நல்ல முன்னேற்றம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ராயல் என்ஃபீல்டு வண்டிகளின் பாரம்பரிய வடிவத்தை தக்க வைத்துக் கொண்டே மின்சார வாகனம் வடிவமைக்கப்படுகிறது" என்று கூறினார். மேலும், இதற்காக, கடந்த டிசம்பரில், ஸ்பெயினை சேர்ந்த மின்சார வாகன நிறுவனத்தின் பங்குகளை ஈச்சர் மோட்டார்ஸ் கையகப்படுத்தியது என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu