விவசாயிகளுக்கு ரூ.1.25 லட்சம் கோடி இழப்பீடு - மத்திய வேளாண் அமைச்சகம்

December 3, 2022

பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.1.25 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மத்திய வேளாண் அமைச்சகம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் தவிர்க்க முடியாத இயற்கை அபாயங்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு முழுமையான காப்பீட்டுத் தொகையை வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது. கடந்த 2016 முதல் விவசாயிகள் பிரீமியத் தொகையாக ரூ.25,186 கோடி செலுத்தியுள்ளனர். இவர்களுக்கு இழப்பீடாக கடந்த 6 ஆண்டுகளில் ரூ.1,25,662 […]

பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.1.25 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மத்திய வேளாண் அமைச்சகம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் தவிர்க்க முடியாத இயற்கை அபாயங்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு முழுமையான காப்பீட்டுத் தொகையை வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது. கடந்த 2016 முதல் விவசாயிகள் பிரீமியத் தொகையாக ரூ.25,186 கோடி செலுத்தியுள்ளனர். இவர்களுக்கு இழப்பீடாக கடந்த 6 ஆண்டுகளில் ரூ.1,25,662 கோடி வழங்கப்பட்டுள்ளது.

உலகின் மூன்றாவது பெரிய பயிர் காப்பீடு திட்டமாக பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் உள்ளது. இந்தத் திட்டத்திற்கு ஆண்டுதோறும் 5 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் விண்ணப்பம் அளிப்பதால் வரும் ஆண்டுகளில் இத்திட்டம் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu