துபாய் தீவிபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - முதல்வர் மு.க.ஸ்டாலின்

April 17, 2023

துபாய் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசீம், மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த குடு (எ) முகமது ரபிக், ஆகிய இருவரும் 15.4.2023 அன்று அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் […]

துபாய் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசீம், மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த குடு (எ) முகமது ரபிக், ஆகிய இருவரும் 15.4.2023 அன்று அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழகத்திற்கு கொண்டுவருவதற்கு இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu