திமுக தேர்தல் வாக்குறுதிப்படி 5 மாதங்களில் மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து கணபதி நகர் ராஜாஜிபுரம் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், திமுக ஆட்சி அமைந்து 2 ஆண்டுகளில் சென்னையில் ரூ.240 கோடியில் கிங்ஸ் மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூலகம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. 2019-ல் பிரதமர் மோடி மதுரைக்கு வந்து ரூ.3 ஆயிரம் கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்றார்.
திமுக தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அதிகபட்சமாக 5 மாதங்களில் செயல்படுத்தப்படும். ஈரோட்டில் கனி மார்க்கெட் ஜவுளி மையம், சத்தி சாலை பேருந்து நிலைய மேம்பாடு, தினசரி மார்க்கெட் மேம்பாடு, வணிகவளாகம் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்தல் வெற்றிக்குப் பிறகு ரூ.1,000 கோடியில் பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவிக்க உள்ளார் என்று கூறினார்.