குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமை தொகை ஜூன் 3-ல் தொடங்க முடிவு

February 27, 2023

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமை தொகை திட்டத்தை கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக அளித்தது. அதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டமும் ஒன்று. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘‘குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்தார். இதற்கிடையில், முன்னாள் […]

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமை தொகை திட்டத்தை கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக அளித்தது. அதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டமும் ஒன்று. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘‘குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி இந்த திட்டத்தைத் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu