பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

December 19, 2022

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் ரொக்கப் பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கமாக உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கப் பணத்துடன் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரையுடன் என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பொங்கலுக்கு பொதுமக்களுக்கு பணமாக கொடுக்கும் பட்சத்தில் ரூ.1000 […]

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் ரொக்கப் பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கமாக உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கப் பணத்துடன் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரையுடன் என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் பொங்கலுக்கு பொதுமக்களுக்கு பணமாக கொடுக்கும் பட்சத்தில் ரூ.1000 ரொக்கப் பணத்தை ரேசன் கார்டுதாரர்களின் வங்கிக் கணக்கு மூலம் வழங்கினால் எளிதாக இருக்கும் என்று நிதித்துறை தெரிவித்த கருத்து முன் வைக்கப்பட்டது. ஆனால் ரூ.2 கோடியே 23 லட்சம் ரேஷன் கார்டுகளில் இன்னும் சில ஆயிரம் ரேசன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுபற்றி முடிவு செய்து விரைவில் வெளியிடுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu