மத்திய அமைச்சரவை, பான் 2.0 திட்டத்திற்கு ரூ.1,435 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
பான் 2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ரூ.1,435 கோடியுடன் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தற்போது உள்ள பான் கார்டுகளை மேம்படுத்தி, புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் க்யூ ஆர் கோடு வசதியுடன் உருவாக்கபடும். புதிய பான் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை; ஏற்கனவே உள்ள பான் கார்டுகளை மேம்படுத்திவிட்டு, அனைவருக்கும் புதுப்பிக்கப்பட்ட பான் கார்டுகளை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பான் கார்டில்,க்யூ ஆர் கோடு குறியீடு மற்றும் பத்திரிகைகள், வங்கி நடவடிக்கைகள் மற்றும் தனி நபர் அடையாளத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.