பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில் பள்ளிக்கல்வியில் மாணவ சேர்க்கை உயர்ந்துள்ளது. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும். நாட்டுப்புற கலைகள் மற்றும் கலைஞர்களை பாதுகாக்க 11 கோடியும், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரிக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டத்திற்கு ரூ.50 கோடியும், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக ரூ.7500 வழங்கப்படும். பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி நிதியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.6,967 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.














