இமாச்சலப் பிரதேச தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தங்களது வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், இமாச்சலப் பிரதேச தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தங்களது வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. சிம்லாவில் உள்ள மாநில கட்சித் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்ட அந்த தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு மாதம் ரூ.1,500 மாதந்திர உதவித்தொகை, 300 யூனிட்கள் இலவச மின்சாரம், பழைய ஓய்வுதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும், 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
நடமாடும் மருத்துவமனைகள் மூலமாக ஒவ்வொரு கிராமத்தினருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும் எனவும், இளைஞர்கள் புதிய தொழில்கள் தொடங்க ரூ.680 கோடி ஸ்டார்ட்அப் நிதி வழங்கப்படும் எனவும் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளது. மாட்டு சாணம் கிலோ ரூ.2 க்கு கொள்முதல் செய்யப்படும் எனவும் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.