தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 12 லட்சமாக அறிவிப்பு

February 3, 2025

மத்திய அரசின் 2025-26 பட்ஜெட்டில், தனிநபர் வருமானவரி விலக்கு வரம்பு ரூ. 7 லட்சத்திலிருந்து ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாதம் ரூ. 1 லட்சம் வருவாய் ஈட்டும் பணியாளர்கள் வரிவிலக்கு பெறலாம். 2014-ஆம் ஆண்டு மோடி அரசு பதவியேற்றபோது, வரிவிலக்கு வரம்பு ரூ. 2 லட்சமாக இருந்தது. தொடர்ந்து இது ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014-ல் ரூ. 5 லட்சம் வருவாய் ஈட்டுவோர் ரூ. 50,000 வரி செலுத்த வேண்டியிருந்த நிலையில், 2025-ல் […]

மத்திய அரசின் 2025-26 பட்ஜெட்டில், தனிநபர் வருமானவரி விலக்கு வரம்பு ரூ. 7 லட்சத்திலிருந்து ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாதம் ரூ. 1 லட்சம் வருவாய் ஈட்டும் பணியாளர்கள் வரிவிலக்கு பெறலாம். 2014-ஆம் ஆண்டு மோடி அரசு பதவியேற்றபோது, வரிவிலக்கு வரம்பு ரூ. 2 லட்சமாக இருந்தது. தொடர்ந்து இது ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014-ல் ரூ. 5 லட்சம் வருவாய் ஈட்டுவோர் ரூ. 50,000 வரி செலுத்த வேண்டியிருந்த நிலையில், 2025-ல் அவர்கள் முழுமையாக விலக்கு பெறுகின்றனர். ரூ. 12 லட்சம் வருமானம் பெறுவோர், முன்னர் ரூ. 1.9 லட்சம் செலுத்த வேண்டிய நிலையில், இப்போது வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும், ரூ. 18 லட்சம் வருமானம் பெறுவோர் ரூ. 3.7 லட்சத்திலிருந்து ரூ. 1.4 லட்சமாகவும், ரூ. 30 லட்சம் வருவாய் ஈட்டுபவர்கள் ரூ. 7.3 லட்சத்திலிருந்து ரூ. 4.8 லட்சமாகவும் குறைந்த விகிதத்தில் வரி செலுத்தலாம்.

2020-ல் அறிமுகமாகி 2023-ல் மாற்றியமைக்கப்பட்ட புதிய வரிமுறையில், வரி விகித அடுக்குகள் 5% முதல் 30% வரை விரிவாக்கப்பட்டுள்ளன. முன்னர் மூன்று மட்டுமே இருந்த வரி அடுக்குகள், தற்போது 10%, 15%, 20% மற்றும் 25% ஆகிய இடைநிலை அடுக்குகளுடன் கூடியதாக உள்ளது. இந்த புதிய மாற்றம் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்டவர்களுக்கு பெரிதும் உதவக் கூடியதாக அமைந்துள்ளது. குறிப்பாக மென்பொருள் தொழிலாளர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர், ஏனெனில் இந்த துறையில் பணிபுரிபவர்கள் வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 12 லட்சம் வருமானம் ஈட்டுகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu