பெட்ரோல் நிலையங்களில் ரூ.2,000 நோட்டை மாற்றலாம்

பெட்ரோல் நிலையங்களில் ரூ.2,000 நோட்டை மாற்றலாம் என இந்திய பெட்ரோலிய வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்திய பெட்ரோலிய வியாபாரிகள் கூட்டமைப்பு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் மத்திய ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில் வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்புவதற்காக ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுத்தால் பெட்ரோல் நிலையங்கள் வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொண்டு வரும் வாகன ஓட்டிகளை திருப்பி அனுப்பாமல் அவர்களிடம் குறைந்தபட்சம் […]

பெட்ரோல் நிலையங்களில் ரூ.2,000 நோட்டை மாற்றலாம் என இந்திய பெட்ரோலிய வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய பெட்ரோலிய வியாபாரிகள் கூட்டமைப்பு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் மத்திய ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில் வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்புவதற்காக ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுத்தால் பெட்ரோல் நிலையங்கள் வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொண்டு வரும் வாகன ஓட்டிகளை திருப்பி அனுப்பாமல் அவர்களிடம் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பெட்ரோல், டீசலை போடுமாறு அறிவுறுத்த வேண்டும்.

மேலும் ரூ.10 ஆயிரத்துக்கு எரிபொருள் நிரப்ப ரூ.2 ஆயிரம் நோட்டுகளை செலுத்தும் வாடிக்கையாளர்களின் கேஒய்சி விவரங்களைப் பெற வேண்டும். வியாபாரிகள் தங்களது தினசரி விற்பனையை விட கூடுதல் பணத்தை வங்கிகளில் தினசரி செலுத்த வேண்டாம். குறிப்பாக ரூ.2 ஆயிரம் நோட்டுகளை செலுத்த வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu