குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
கர்நாடக சட்டசபைக்கு மே 10-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலையொட்டி ஜனதாதளம் (எஸ்) கட்சி ஏற்கனவே தேர்தல் அறிக்கை வெளியிட்டுவிட்டது. அக்கட்சி ஆண்டுக்கு 5 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆளும் பா.ஜனதா நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, ஆண்டுக்கு 3 சமையல் கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அறிக்கையில் முக்கிய அறிவிப்பாக அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.