ஸ்பெயினில் ரூபாய் 2500 கோடி முதலீடு ஆயிரம் பேருக்கு வேலை

February 2, 2024

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் ஸ்பெயினில் உலகின் முன்னணி நிறுவனமான ஹபக் லாய்டு நிறுவனத்துடன் 2500 கோடி ரூபாய் முதலீட்டிற்கான உறுப்பினர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார். தற்போது தமிழ்நாட்டில் உள்ள பெரும் துறைமுகங்களை பயன்படுத்தி சரக்கு கையாளும் கன்டெய்னர் துறைமுகங்கள், சரக்கு […]

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் ஸ்பெயினில் உலகின் முன்னணி நிறுவனமான ஹபக் லாய்டு நிறுவனத்துடன் 2500 கோடி ரூபாய் முதலீட்டிற்கான உறுப்பினர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார். தற்போது தமிழ்நாட்டில் உள்ள பெரும் துறைமுகங்களை பயன்படுத்தி சரக்கு கையாளும் கன்டெய்னர் துறைமுகங்கள், சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளை அமைத்திட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வவகையில் சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் ஹபக் லாயடு நிறுவனத்தின் இயக்குனர்களை முதலமைச்சர் சந்தித்து பேசினார். பின்னர் 2500 கோடி ரூபாய் முதலீட்டில் தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்நிறுவனம் முன்வந்து உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் தலைமையில் கையெழுத்திட பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதோடு தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu