பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூபாய் 3.02 கோடி என பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்று உத்தரபிரதேச மாநில வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். அவருடன் பாஜக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக தலைவர் ஜே. பி நட்டா உள்ளிட்டோர் இருந்தனர். அதனை தொடர்ந்து அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பு 3.02 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் 2014 ஆம் ஆண்டு முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக வாரணாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தற்போது மூன்றாவது முறையாக போட்டியிட உள்ளார். இந்நிலையில் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் ரூபாய் 3.02 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களையும்,
ரூ.51,920 ரொக்கத்தையும் வைத்திருக்கிறார் என்றும், அவருக்கு சொந்தமாக நிலம், வீடு கார் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது