சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் - புதுவை பட்ஜெட்டில் அறிவிப்பு

March 13, 2023

சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம், பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 உள்ளிட்ட அறிவிப்புகள் புதுவை பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. புதுச்சேரி சட்டப்பேரவையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு  ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். புதுச்சேரியில் 11, 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 18 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்படும். புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டருக்கு மாதம் ரூ.300 […]

சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம், பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 உள்ளிட்ட அறிவிப்புகள் புதுவை பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

புதுச்சேரி சட்டப்பேரவையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு  ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். புதுச்சேரியில் 11, 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 18 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்படும். புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்கப்படும்.

கல்வி தரத்தை மேம்படுத்த அனைத்து அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும். மகளிர் மேம்பாட்டிற்காக ரூ.1,330 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 50 புதிய மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப்படும். மீனவர் உதவித் தொகை ரூ.3,000-ல் இருந்து ரூ.3,500-ஆக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu