அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கே.என். நேரு அம்மா உணவகங்கள் குறித்து விளக்கம் அளித்தார். எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் நிறுத்தப்படவில்லை என்றும், அவற்றை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மழைக்காலத்தில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டதாகவும் அவர் கூறினார்.