தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ரூ.5 கோடி நிதி உதவியை வழங்குகிறார்.
நேற்று கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதம் ஏற்பட்டதை அடுத்து, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தங்கள் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான உதவிகளை வழங்க உறுதி செய்தார். மேலும், கேரளா மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உதவியற்காக இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், டாக்டர் கீ.சு. சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் தலைமையிலான குழுவை உடனடியாக அனுப்ப உத்தரவிட்டார். மேலும் தமிழ்நாடு முதல்வர், பொது நிதியில் இருந்து கேரளா நிவாரண பணிக்காக 5 கோடி ரூபாயை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.