''மஹாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்காக 5 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது,'' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த ஆட்சியில் மஹாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளது. அதனை பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் அனைத்து முறைகேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்கப்படும் தொகை நேரடியாக அவர்களது வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கடந்த எட்டு ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகையில் 20 சதவீதம் கொரோனா காலத்தில் செலவிடப்பட்டது.
மேலும் தெலுங்கானா மாநிலம், இந்த திட்டத்தின் மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றுள்ளது. இந்த நிதி முறையாக செலவிடப்படவில்லை என்றாலோ, தணிக்கை தொடர்பான விஷயத்தில் பிரச்சனை இருந்தாலோ, ஆய்வு நடத்தும் குழு இது குறித்து முறைப்படி புகார் தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார்.