ஜியோ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் - 8000 முதல் 12000 ரூபாய் வரை விற்க முடிவு

September 27, 2022

ஜியோ நிறுவனம், 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, ஜியோ நிறுவனம், 4ஜி தொழில்நுட்ப அறிமுகத்தின் போது, புதிய ஃபோன்களை அறிமுகம் செய்தது. இதன் மூலம், பல பயனர்கள் 4ஜி தொழில்நுட்பத்திற்கு மாறினர். நிறுவனத்தின் வர்த்தகமும் பன்மடங்கு உயர்ந்தது. இதே உத்தியை 5ஜி தொழில்நுட்ப அறிமுகத்தின் போதும் கையாள ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், 5ஜி சகாப்தத்திலும் ஜியோ நிறுவனம் தனது தலைமையை […]

ஜியோ நிறுவனம், 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, ஜியோ நிறுவனம், 4ஜி தொழில்நுட்ப அறிமுகத்தின் போது, புதிய ஃபோன்களை அறிமுகம் செய்தது. இதன் மூலம், பல பயனர்கள் 4ஜி தொழில்நுட்பத்திற்கு மாறினர். நிறுவனத்தின் வர்த்தகமும் பன்மடங்கு உயர்ந்தது. இதே உத்தியை 5ஜி தொழில்நுட்ப அறிமுகத்தின் போதும் கையாள ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம், 5ஜி சகாப்தத்திலும் ஜியோ நிறுவனம் தனது தலைமையை நீட்டித்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் மாதத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ள 5ஜி தொழில்நுட்ப சேவைகளில், குறிப்பிட்ட வரம்பை அடைந்த பின்னர், 5ஜி ஸ்மார்ட்போன்களை நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட் ஃபோன்களின் விலை 8000 ரூபாயில் இருந்து 12000 ரூபாய் வரை இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. வரும் 2024 ஆம் ஆண்டில், இந்த போன்கள் பெரும் அளவு சந்தையில் விற்பனையாகும் என்று கருதப்படுகிறது. இந்த போன்கள், மலிவு விலையில் விற்பனை செய்யப்படுவதால், அதிக அளவிலான பயனர்களை சென்றடையும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம், ஸ்மார்ட் ஃபோன்கள் விற்பனையிலும் ஜியோ நிறுவனம் முதலிடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu